செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை, குறிப்பாக வெள்ளை நிற பணியாளர்களின் எதிர்காலத்தை மிகவேகமாக மாற்றியமைக்க போகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்த மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அடுத்த நான்கு முதல் ...

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று ராணுவத்தினரின் கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து விலகி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற அந்த ராணுவ வாகனம், உயரமான இடத்தில் உள்ள ஒரு நிலையை ...

வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் தேசிய பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு கார்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்றது .இந்த பேரணியை கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி வ உ சி மைதானத்தில் தொடங்கி ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை,கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்நிலையில் பல சமயங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை ஏற்ப்படுத்தி வரும் நிலை தொடர்ந்து வருவதால் இதனை கருத்தில் கொண்டு மனித- வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தவும் அதை தடுக்கவும் மாவட்ட ...

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கிடையே வங்கிகளை பிரதிநிதிப்படுத்தும் ...

பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து, அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட ...

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் அமெரிக்காவின் இரண்டு ரோட்டரி கிளப்புகள் சார்பில் 55 குழந்தைகளுக்கு 52 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டைப் ஒன் டயாபடீஸ் இன்சுலின் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் டைப் ஒன் டயாபடீஸ் எனப்படும் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்நாள் ...

கோவையில், வாழும் கலை அறக்கட்டளையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான “ஸ்வர தாரங்கிணி” பஜனை போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். குழந்தைகளிடையே பஜனை பாடலின் பண்டைய இந்திய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் நடைபெற்ற  விழாவில், இசையின் மூலம் ஒழுக்கம், மன அமைதி, உணர்ச்சி சமநிலை ...

கோவை பீளமேட்டில் கொடிசியா அருகே தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு ஒரு ராட்சத ராட்டினத்தில் ” ஸ்கை லிப்ட் ” பலர் ஏறி உட்கார்ந்து இருந்தனர். அது சுழலும் போது திடீரென்று பழுதடைந்தது. இதனால் 80 அடி உயரத்தில் இருந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர்.அந்தரத்தில் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது இதில் ...

32 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி நிலத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இடித்து நிலத்தை மீட்டனர். கோவை மாநகராட்சி சரவணம்பட்டி மீனாட்சி நகரில், நகர ஊரமைப்பு துறை ஒப்புதலோடு வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டது. இதில் பொது பயன்பாட்டு இடத்திற்காக ஒதுக்கப்பட்ட 13 சென்ட் இடத்தை, சிவஞானம் என்பவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி இருந்தார்.இவர் தி.மு.க பிரமுகர் என்பதால்,அதிகாரிகள் ...