உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் ”இந்தியாவில் இணைய வசதி மிக எளிதாக கிடைப்பதால், சிறுவர்கள் உட்பட அனைவரும் ஆபாசப் படங்களை மிக எளிதாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கடுமையான அடிமைத்தனத்திற்கும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி ஆபாச பொருட்களைப் பரப்புவதும், வெளியிடுவதும் மட்டுமே குற்றமாகக் ...
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைய தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைந்தது. தொடர்ந்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் ஒரு பிரிவினரும் அமமுக சட்டமன்ற உறுப்பினரும் ...
உலக அளவில் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த விமானப்படைகளைக் கொண்ட நாடுகளின் 2026-ஆம் ஆண்டுக்கான புதிய பட்டியலை ‘டபுள்யூ.டி.எம்.எம்.ஏ.'(WDMMA) அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய விமானப்படை தொடர்ந்து 5-வது ஆண்டாக 3-வது இடத்தைப்பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 103 நாடுகளைச் சேர்ந்த 129 வான்வழிச் சேவைகள் மற்றும் 48,000-க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் இந்த ...
தமிழகம் முழுவதும் 57 பெண் உதவி ஆய்வாளர்களை இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த 57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக ...
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ். அருண், போலீஸ் அகாடமிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.ஜி. மகேஸ்வரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக மகேஸ்வரி ஐபிஎஸ் இருந்துவரும் நிலையில் ...
டெல்லியில் அந்நிய செலாவணி வெளிநாடு வாழ் இந்தியர் வைப்புத்தொகைகள், வெளிநாட்டு வணிகக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு அந்நியச் செலாவணிக் கடன்கள் பரிமாற்றத் திட்டங்கள் குறித்த பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு வாழ் ...
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். பொருட்களின் தரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாகத் தரமான அரிசி வழங்குவதற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ‘தாயுமானவன்’ திட்டம் ...
சம்பளப் பிடித்தம் மற்றும் அடிப்படைச் சலுகைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து, வரும் ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மற்றும் சேர்க்கை மையங்கள் முற்றிலும் மூடப்படும் எனத் தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இ-சேவை மையங்களில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளர்களுக்குத் தொடர்ந்து முறையான ஊதியம் வழங்கப்படாமல் சம்பளப் பிடித்தம் செய்யப்படுவதாகவும், பி.எஃப் ...
சீனாவில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்ட, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மிகவும் அரிதான இந்த வெண்கல பாட்டிலின் உள்ளே காய்ந்துபோகாமல் திரவ நிலையில் இருந்த பானம், ‘சின்’ (Qin) ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட பழமையான பீர் வகை மதுபானம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனப் பெருஞ்சுவருக்கு ...
கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப் பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகர பகுதியில் சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு 4 பெண் சப்இன்ஸ்பெக்டர் 8 பெண் போலீசார் மற்றும் 4 போலீஸ் டிரைவர் ஆகியோரம் மாவட்ட காவல் துறையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் 4 பெண் போலீசார் 2 போலீஸ் ...













