சீனாவில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்ட, காற்றுப்புகாத வெண்கல பாட்டில் ஒன்றைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
மிகவும் அரிதான இந்த வெண்கல பாட்டிலின் உள்ளே காய்ந்துபோகாமல் திரவ நிலையில் இருந்த பானம், ‘சின்’ (Qin) ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட பழமையான பீர் வகை மதுபானம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷான்ஜியாபோ (Shanjiabo) கல்லறையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பூமிக்கடியில் பத்திரமாகப் புதைக்கப்பட்டிருந்த வெண்கல பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சீனாவை முழுமையாக ஒன்றிணைப்பதற்கு முன்பாக, சின் அரசு அதிகாரத்திற்கு வரத்தொடங்கிய காலக்கட்டத்தில் (கி.மு. 547 முதல் கி.மு. 221 வரை) இந்தக் கல்லறை கட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெண்கல பாட்டிலின் உள்ளே இருந்த திரவம் ஆவியாகாமலும், மாசுபடாமலும் அப்படியே பாதுகாப்பாக இருந்தது விஞ்ஞானிகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த பாட்டில் எவ்வாறு இத்தனை நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கையில் வெண்கல பாட்டிலின் வாய்ப்பகுதி முதலில் ஒரு புட்டித் துணியால் மூடப்பட்டுள்ளது. அதன்பின்னர், அதன் திறப்புப் பகுதி மண் மற்றும் கரிமப் பொருட்களின் சிறப்பு கலவையால் இறுக்கமாக மூடிச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாட்டிலுக்குள் காற்று நுழைய முடியாமல் தடுத்து, பல நூற்றாண்டுகளாகத் திரவம் ஆவியாகாமல் பத்திரமாகச் சேமிக்கப்பட்டுள்ளது.
கி.மு. 475 முதல் கி.மு. 221 வரையிலான சின் அரச காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மதுபானத்தைப் பரிசோதித்தபோது, இது வழக்கமான பழங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மாறாக, தானியங்களை வேதியியல் கலவை முறையில் காய்ச்சி இந்த பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. பீரில் புல், சோளம், தினை, கோதுமை, பார்லி மற்றும் ப்ரோசா தினை (Proso millet). சுவையை மேம்படுத்துவதற்காகச் சேர்க்கப்பட்ட அமினோ அமிலங்கள். மேலும், அந்த வெண்கல பாட்டிலுக்குள் மதுபானத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பாதுகாக்கப்பட்ட ஈஸ்ட் செல்கள் (Yeast cells) இன்றும் அழியாமல் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சின் காலத்தில் மறக்கப்பட்ட பண்டைய கால பீர் தயாரிப்பு முறை, தற்போதைய வரலாற்று ஆய்வுகளுக்கு முக்கிய சான்றாக அமைந்துள்ளது.







