டெல்லியில் அந்நிய செலாவணி வெளிநாடு வாழ் இந்தியர் வைப்புத்தொகைகள், வெளிநாட்டு வணிகக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு அந்நியச் செலாவணிக் கடன்கள் பரிமாற்றத் திட்டங்கள் குறித்த பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை அணுகும் முறையை மேம்படுத்த வேண்டும், புதுமையான வைப்புத்தொகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறும், இந்த திட்டங்களின் மீதமுள்ள காலக்கட்டத்தில் நிதி திரட்டும் வேகத்தை தக்கவைக்குமாறும் வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்!






