கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் தனது சேவையை தொடங்கியது. அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து அயோத்திக்கு, 745 பயணிகளோடு, முதல் சிறப்பு ...
அமாவாசை தினங்களுள் முக்கியமானது தை அமாவாசை. இந்த நாளில், மக்கள் தங்களது முன்னோர்களுக்கு புண்ணிய நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று முக்கிய கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.ஓராண்டில் 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொன்னாலும், ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமானது. ...
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்காக 200க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர். மத்திய பாஜக அரசு 2020-ல் கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத வகையில் ...
டெல்லி: நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் மானிய விலையில் ‘பாரத் அரிசியை’ விற்பனை செய்ய உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை ,வி. எஸ் .கே . நகர், 4 -வது வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் ( வயது 53 ) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை ...
கோவை சரவணம்பட்டி, சங்கரா கல்லூரி ரோட்டில் உள்ள செந்தூர் புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 51) சி.என்.சி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை தனது மனைவி, தாயார் மற்றும் குழந்தையுடன் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை பாலகுமார் ஓட்டினார். மாலை 5:45 மணிக்கு கோவை – பொள்ளாச்சி சாலையில் ஏழுர் பிரிவு அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து ...
கோவை பீளமேடு வி. கே. ரோடு , தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகானி (வயது 48) உத்ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து தனியார் பம்ப் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் உள்ளனர். சம்பவத்தன்று ...
கோவை மாநகர வடக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சந்தீஷ். இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் .இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய போலீஸ் துணை கமிஷனராக ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இவர் இன்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் சென்னை அண்ணாநகர் ...
கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுகள் அனைத்தும் அங்குள்ள 11 அடி ஆழ செப்டிக் டேங்கில் உள்ளது. அதை 2 வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை செப்டிக் டேங்கில் தேங்கி இருக்கும் கழிவுகளை ...












