போதை இல்லா கோவைக்காக ஓடுவோம்” மாரத்தான் மாவட்ட போலீஸ் சார்பில் நடக்கிறது. இதுகுறித்துகோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:- போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, “போதை இல்லா கோவை” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த கோவை மாவட்ட எஸ்பி., பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் படி வரும் 8-ம் தேதி (சனிக்கிழமை) போலீசார் சார்பில் மாரத்தான் நடைபெறவுள்ளது. ...

கோவை மாநகர போலீசில் கமிஷனர் கண்ணன் உட்பட 43 பேருக்கு முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்ட மற்றும் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.,க்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு முதல்வரின் விருதுகள் மற்றும் ...

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது எனும் பகுதியில் அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருகிறது.இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.மக்களவையில் காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு மேற்குறிப்பிட்டவாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறது.இந்த ஆண்டு போதுமான மழை ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ...

இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகரமாகத் திகழும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஆண்டிற்கு ரூ.6,000 கோடி விற்பனை கொண்ட முன்னணி ஐரோப்பிய பட்டாசு இறக்குமதி நிறுவனம் ஒன்று, சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பட்டாசுகளைக் கொள்முதல் செய்யத் தயாராகி வருகிறது. இதற்கான முதற்கட்டமாக, சுமார் 50 ஏற்றுமதி கன்டெய்னர்கள் ...

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் மீது 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் வருவாயை பயன்படுத்தி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட நாட்களாக ...

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து மற்றும் இதர வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பாக, பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வாகன உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் கடந்த 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாகன ...

தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.இதன் காரணமாக இன்று அதிகாலை முதல், ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் ...

சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளை மேம்படுத்தவும், காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு மாற்றாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை கொடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி உணவை கொண்டு வந்தது. காமராஜர் ஆட்சி அதை மதிய உணவாக ...

கோவை மருத்​துவ தம்​ப​தி​களான சகுபர் சாதிக் – ஹஸ்​மத் பர்​சா​னா, தங்​கள் மருத்​து​வ​மனையை அடமான​மாக வைத்து எல்​ஐசி வீட்டு வசதி நிதி நிறு​வனத்​தில் கடன் பெற்​னர்.கரோனா கால​கட்​டத்​தில் நிதி நெருக்​கடி​யால் கடனை திருப்பி செலுத்த முடி​யாமல் ஒரே தவணை​யாக ரூ.4 கோடி செலுத்​து​வ​தாக பேசி முடிவு செய்​தனர்.அந்த தொகையை எல்​ஐசி நிதி நிறு​வனத்​தில் செலுத்தி பத்​திரத்தை ...