சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகிறார். டெல்லியில் செப்டம்பர் 12,13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்பிஜி , பிஎன்ஜி மற்றும் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் தொடரும் முற்றுகை காரணமாக, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ...
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்ற மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் விஜய் உரையாற்றினார்.அதில் நீட் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார்.10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்தார் தவெக ...
வானிலை ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு தீவிர ‘எல் நினோ’ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அதன் பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் ...
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்ப கால அவகாசம் 30.06.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு எல்லாம் நன்மை, ஏன் இதனை செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 20.10.2016 அன்று அல்லது ...
தமிழகத்தில் மேல்சபையை (Legislative Council) மீண்டும் அமைக்கும் சாத்தியம் குறித்து அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், டாஸ்மாக் தொடர்பாகவும் முக்கிய கொள்கை மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுவதால், வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேல்சபை என்பது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை மறுஆய்வு செய்து ...
இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு பாரம்பரிய நீல நிற ஆடைக்குப் பதிலாக காவி நிறம் அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது நாட்டில் அகிம்சை, சத்தியம் மற்றும் சகோதரத்துவம் வேரூன்றியுள்ளது என்றும், இந்த விழுமியங்களைப் பறிக்க முடியாது எனவும் கூறினார். இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி ...
கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் கல்லூரிகளில் கட்டாய பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்ற செய்திகள் பரவின. இதனை தொடர்ந்து, கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் மற்றும் அதன் திட்ட இயக்குநர் பத்மா ...
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்குப் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுவரை மொத்தம் 4,23,955 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் ...
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.அரசுப் பள்ளிகள் ...













