தமிழக சட்டமன்ற வென்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளார்.
சன் நியூஸ், கலைஞர் நியூஸ் உள்ளதோ, நியூஸ் ஜே உள்ளதோ, அதேபோல் ஒவ்வொரு தொலைக்காட்சி பின்னணியில் அரசியல் கட்சிகள் உள்ளன. அதேபோல் விஜய்க்காக வெற்றி சேனல் வருகிறது. இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த பேச்சாளருமா நாஞ்சில் சம்பத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசின் காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைத் துறையில் “வெற்றி” (VETRI) என்ற பெயரில் புதிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான வர்த்தக முத்திரை விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது. இந்திய அறிவுசார் சொத்துரிமை (IP India) இணையதள தரவுகளின்படி, ஊடக ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைக்கான ‘வகுப்பு 38’ (Class 38) கீழ் இந்த விண்ணப்பம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக இது வருகிறது. விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு என்று எந்த ஊடகமும் இதுவரை இல்லை. ஆனால் அதிமுக, திமுக, மதிமுக, விசிக, பாமக, அமமுக என எல்லா அரசியல் கட்சிகளுக்குமே தொலைக்காட்சி உள்ளது. தவெக அரசின் புதிய திட்டங்கள், முதலமைச்சர் விஜய்யின் மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றி மக்களிடம் சேர்க்க ஒரு அதிகாரப்பூர்வ ஊடகம் அவசியம் என்பதால் ‘வெற்றி தொலைக்காட்சி’ (Vetri TV)யை தொண்டர்களின் விருப்பப்படி தவெகவின் சேனலாக முதல்வர் விஜய் ஆரம்பித்துள்ளார்.தவெக சார்பில் புதிய சேனல் தொடங்கும் ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தொழில்நுட்ப நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சப் எடிட்டர்கள், நியூஸ் புரொடிசர்கள் மற்றும் ஆங்கர்களை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தது. சேனல் விரைவில் வர உள்ளது உறுதியாகி உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த பேச்சாளருமா நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஊடக உலகில் வலது கால் எடுத்து தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறது வெற்றி தொலைக்காட்சி. தமிழக வெற்றிக்கழகத்தின் மீது அவதூறு அம்புகள் எய்யப்படுமானால், அதே அம்புகளை பிடுங்கி எறியும் கடமையை வெற்றி தொலைக்காட்சி செய்யும். ஒரு ஊடகம் தான் சமூகத்தில் சுக துக்கங்களை தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.ஊடக உலகில் கால் பதித்து இருக்கிற வெற்றித்தொலைக்காட்சி , வெற்றியைதவிர வேறு எதுவும் பெறாது என்ற நம்பிக்கையுடன் வெற்றி தொலைக்காட்சியை நான் வாழ்த்துக்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.






