20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் புதிய நியமனங்களையும் அரசாணையாக தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் ஐஏஎஸ் வெளியிட்டார்

அதன்படி, தகவல் தொழில்நுட்பத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறு மற்றும் குறு தொழில் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த் ஐஏஎஸ் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈடி நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த தீரஜ்குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தலைமை செயலாளராக இருந்த காகர்லா உஷா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக இருந்த சுந்தரவல்லி ஐஏஎஸ் பொதுத்துறைசெயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் முன்னாள் எம்.டி உமாநாத், தமிழ்நாடு தொழில் துறை ஆணையரகத்தின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாலர் சி.ஜி.தாமஸ் வைத்தியன் தொழில்துறையின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளரலாக இருந்த வள்ளலார் தொழிலாளர் நலத்துறையின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையராக சுப்ரியா சாகு ஐஏஎஸ், அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தமிழ்நாடு மின்துறை தலைவராக அருண்ராய் ஐஏஎஸ், போக்குவரத்து துறை செயலாளராகநிர்மல் ராஜ் ஐஏஎஸ் உள்ளிட்ட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.