கோவை சரவணம்பட்டி விநாயகபுரம்,குமரன் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மனோஜ் பிரசாத் (வயது 25.) இவர் ஒரு செய்தி நிறுவனத்தில் நிருபராக வேலை பார்த்து வருகிறார்.பெற்றோர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டாமல் ,காம்பவுண்ட் கேட்டை மட்டும் பூட்டி விட்டு வெளியே சென்றனர். அப்போது யாரோ வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 2 ...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான ...
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரம்யா(வயது21). இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சாந்தரக் கடவு முன்னணிப் பரம்பை சேர்ந்த வினிஸ்(22) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து 2 பேரும் நண்பர்களாக பேசி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் சாலைகளிலும், மார்க்கெட் பகுதிகளிலுமே சுற்றி திரிகிறது. அப்படி சுற்றி திரியும் கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள் கடைகள் முன்பு வைத்துள்ள காய்கறிகளை சாப்பிடுகின்றன. அங்கிருந்து விரட்டி விட்டாலும் எங்கும் செல்லாமல் அங்கேயே ...
சென்னை: அந்தமான் மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை மத்திய அரசு விரைவில் செய்து கொடுக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அந்தமானில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ...
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அந்த ...
எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 22 பேரை ஓபிஎஸ் நீக்குவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி கே பழனிசாமி, கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், ...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து, ஜெட்டா எனும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள நகரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து , வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அரசு மாலைகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் கட்டுப்படுத்த முடியாமல் தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவை ...
இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக செனட்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் டிராகி வெற்றி பெற்றார்.பிப்ரவரி 2021 இல் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவால் டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “இன்றிரவு குடியரசுத் தலைவரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பிப்பேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்,” ...
பொன்னையன் பேசிய ஒரு ஆடியோவே எடப்பாடி அணியில் பெரும் புயலை வீசி இருக்கிறது. அதன் பின்னர் பொன்னையன் ஓபிஎஸ் இடம் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். அந்த ஆடியோவில் நாஞ்சில் கோலப்பன் போல முழு ஆடியோவை உடனே வெளியிடாமல் அந்த ஆடியோவில் இருக்கும் விஷயத்தை ...













