கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவூதிக்கு தப்பி ஓட்டம்..?

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து, ஜெட்டா எனும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள நகரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து , வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அரசு மாலைகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் கட்டுப்படுத்த முடியாமல் தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது.

நிலைமையை பார்த்து பயந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார். அவர் மாலத்தீவில் இருக்கிறார். ஆதலால் மாலத்தீவில் இருந்து இலங்கை திரும்ப வேண்டும் என்றெல்லம் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், மாலைதீவில் இருந்து, கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அதுவும், தனியார் ஜெட் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுவிட்டார் என்றெல்லாம் செய்தி வெளியாகியது.

தற்போது வெளியான தகவலின் படி, கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சொல்லவில்லையாம். மாறாக, சிங்கப்பூரில் இருந்து, ஜெட்டா எனும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள நகரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.