நான் உங்களை அதிமுகவிலிருந்து நிக்குறேன்… நீ என்னை நீக்கு… சரியா.. அப்படியே மாத்தி மாத்தி நீக்கி விளையாடுவோமா… செல்லூர் ராஜு, வளர்மதி உள்ளிட்ட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.! -ஓபிஎஸ் அதிரடி .!

எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 22 பேரை ஓபிஎஸ் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

எடப்பாடி கே பழனிசாமி, கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம், ஓ எஸ் மணியன், செல்லூர் ராஜு, ஆதி ராஜாராம், ஜக்கையன் உள்ளிட்ட 22 பேரை ஓபிஎஸ் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அதிமுகவின் தலைமை எடப்பாடி கே பழனிசாமி நடவடிக்கை எடுத்து இருந்தார். அதன்படி,

பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணியம், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் வைரமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் சைதை பாபு ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெங்கட்ராமன், கோபாலகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், ராமச்சந்திரன், அசோகன், ஓம் சக்தி, சேகர், கோவை செல்வராஜ், மருது அழகராஜ், ரமேஷ், வினிபாலன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அஞ்சுலட்சுமி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் வைரமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் சைதை பாபு ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.