இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா..!

இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக செனட்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் டிராகி வெற்றி பெற்றார்.பிப்ரவரி 2021 இல் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவால் டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “இன்றிரவு குடியரசுத் தலைவரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பிப்பேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று டிராகி கவுன்சில் கூட்டத்தில் கூறினார்.