கோவையில் பத்திரிக்கையாளர் வீட்டில் தங்க நகை கொள்ளை…

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம்,குமரன் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மனோஜ் பிரசாத் (வயது 25.) இவர் ஒரு செய்தி நிறுவனத்தில் நிருபராக வேலை பார்த்து வருகிறார்.பெற்றோர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டாமல் ,காம்பவுண்ட் கேட்டை மட்டும் பூட்டி விட்டு வெளியே சென்றனர். அப்போது யாரோ வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க செயினை திருடி சென்று விட்டனர். இது  குறித்து பிரசாத் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.