பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கேரளா வாலிபர் தமிழகத்தை சேர்ந்த காதலியுடன் தூக்குப்போட்டு தற்கொலை ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரம்யா(வயது21). இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சாந்தரக் கடவு முன்னணிப் பரம்பை சேர்ந்த வினிஸ்(22) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
இதையடுத்து 2 பேரும் நண்பர்களாக பேசி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறவே செல்போன் எண்களை பரஸ்பரம் பரிமாறி கொண்ட இவர்கள் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சம்மதமும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர். இதனால் காதல் ஜோடியினர் ஒருவித பயத்திலேயே இருந்தனர். எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சம்மதமும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை நம்மை பிரித்து விடுவார்களோ என்று பயந்த காதல் ஜோடியினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து ரம்யா தனது காதலனின் ஊரான நிலம்பூருக்கு சென்றார். அங்கு இருவரும் வினீஷ் வீட்டு அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையே மகனை காணாததால் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அக்கம்பக்கம் தேடினர். அப்போது வினிஷ் தனது காதலியுடன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பத்தேரி டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பத்தேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.