டெல்லி: பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24ல் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் துவக்கி வைக்க உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தபிறகு அவர் முதன் முதலாக அங்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் ஏப்ரல் ...
பெரிய ரஷ்ய போர்க் கப்பல்கள் அதன் தீவுகளுக்கு அருகாமையில் பயணிப்பதைக் கண்டதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ராணுவ வாகனங்களுடன் ரஷ்ய போர்க் கப்பல்கள் பயணிக்கும் படங்களை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய தற்காப்புப் படையின் கடல் ரோந்து பிரிவினர், செவ்வாயன்று ரஷ்ய கப்பல்களை முதன்முதலில் பார்த்துள்ளனர். பின் அதனை தொடர்ந்து ...
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.75 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2.25 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1.75 கோடி வீடுகள் மார்ச் 9ஆம் ...
பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்த வசதி மூலம் பஞ்சாப் மாநில மக்கள், வாட்ஸ்-ஆப் மூலமாகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்களை அளிக்கலாம் என்றும் புதிதாக பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள பகவந்த் மான் கூறியுள்ளார். மாநிலத்தில் 99 ...
டெல்லி: மத்திய அரசு ரேஷன்பொருட்கள் பெற்றுக் கொள்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: இந்தியாவில் உள்ள ...
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் பின்புறம் டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. கடையுடன் சேர்ந்து டாஸ்மாக் பாரும் உள்ளது. அதே சாலையில் அதற்கு முன்னதாக விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென்று கோவிலுக்கு எதிரே புதியதாக டாஸ்மாக் பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ...
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக அரைநாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். பாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது ஏற்கனவே இந்த படத்தை பார்ப்பதற்கு காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என மத்திய பிரதேச ...
உக்ரைன் – ரஷியா போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு தேவையான இராணுவ தளவாடங்கள், பொருளாதார உதவி போன்றவற்றை ஏகாதிபத்திய மேற்கு நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவை செய்து வருகின்றன. போரின் தொடக்கத்தின் போதே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்திற்கு மற்றொரு நாடு வந்தால் வரலாற்றில் இல்லாத அழிவை ...
வாஷிங்டன் : சீனாவுக்கு அந்த நாட்டின் கரன்சியான ‘யுவான்’ வாயிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் டாலருக்கான முக்கியத்துவம் குறைந்தவிடும் என்பதால், அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.தற்போது உலகெங்கும் நடக்கும் வர்த்தகங்களில் பெரும்பாலும், அமெரிக்காவின் கரன்சியான டாலரின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சவுதி ...
சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச ...













