குளிர்கால கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் – அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு ..!

‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமை செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய இல்லம் ஆகியவற்றுடன் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி அக்டோபர் மாதத்திலும், சென்ட்ரல் விஸ்டா அவென்யு புனரமைப்பு பணி ஜூன் மாதத்துக்குள்ளும் நிறைவடையும் என கூறியுள்ளார். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.