கோவை: கோவை மாநகரில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் சைபர் கிளப் துவக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சைபர் குற்றங்களை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆட்சேபகரமான வீடியோ போட்டோக்கள் வெளியாவதை தடுக்க இந்த சைபர் குழுக்கள் ...
கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது. அங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 கரடிகள் சிக்கின. மற்றொரு கரடி தப்பி ஓடியது. மீண்டும் கூண்டு வைக்கப்பட்டாலும், அதில் சிக்காமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வருகிறது. சமீபத்தில் குன்னியட்டி கிராமத்தை ...
தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வேகப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள்ள சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள்,அவர்களது ...
கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி வந்த அந்த உணவை ஆண்ட்ரூஸ் உண்ணும் போது அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ...
கோவை அரசு மருத்துவமணையில் உள்ள எம்.எம். 79-வது வார்டுக்கு இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சுமார் 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆனால் அவரது உடலை அந்த வார்டில் இருந்து இரவு 8.30 மணி உயிரிழந்தவரின் உடலை மருத்துவமணை நிர்வாகத்தினர் ...
கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 150 நபர்களிடம் ரூ.97 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ...
கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதிரன் (52). இவர் தனது மாருதி காரில், மாலை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது திடிரென அவரது காரின் முன் பகுதியில் இருந்து திடிரென புகை கிளம்பியுள்ளது. காரை நிறுத்துவதற்குள் அதிகளவு புகை கிளம்பிய நிலையில், காரில் இருந்த தாமோதிரன் உடனடியாக வெளியே வந்தார். ...
சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணிகள் தொடர் வெற்றி பெற்று உலக நாடுகளை வாய்பிளக்க செய்துள்ளது. உலக அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றன. ...
டெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களிடையே பேசியதாவது: தேசத்தின் 75-வது ...
தமிழ்நாடு காவல்துறையிடம் ஜனாதிபதி கொடி நேற்று ஒப்படைக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ...













