கோவை சாலையில் நின்ற காரில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு .!

கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதிரன் (52). இவர் தனது மாருதி காரில், மாலை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது திடிரென அவரது காரின் முன் பகுதியில் இருந்து திடிரென புகை கிளம்பியுள்ளது. காரை நிறுத்துவதற்குள் அதிகளவு புகை கிளம்பிய நிலையில், காரில் இருந்த தாமோதிரன் உடனடியாக வெளியே வந்தார். தொடர்ந்து காரின் முன் பகுதியில் தீ பிடிக்க துவங்கியதால், உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் அங்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் பொதுமக்களே ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக பரவிய  நிலையில் அங்கு சிறப்பு நிலை அலுவலர் ராமகிருஸ்ணன் தலைமையில் வந்த தனசேகரன், பிரசாந் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் புகை வந்தவுடன் காரை விட்டு தாமோதிரன் இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.