வியந்து போன உலக நாடுகள்… அசத்தும் இந்தியா..!

சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணிகள் தொடர் வெற்றி பெற்று உலக நாடுகளை வாய்பிளக்க செய்துள்ளது.

உலக அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றன.

அதுபோல நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்திய ஏ அணி மால்டோவா அணியையும், இந்திய பி அணி எஸ்டோனிய அணியையும், இந்திய சி ஆணி மெக்சிகோ அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதேபோல பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணி அர்ஜெண்டினா அணியையும், இந்திய பி அணி லாட்வியா அணியையும், இந்திய சி அணி சிங்கப்பூர் அணியையும் வென்றது. நேற்று நடந்த 6 போட்டிகளில் இந்தியாவின் 6 அணிகளும் வெற்றி பெற்று உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.