சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15.60 கோடி மதிப்பிலான ஜிம்னாசியம், செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்றுதிறந்து வைத்தார். மின்துறையில் 101 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அப்போது அவர் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் ...

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வர மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சென்னையில் மெரினா முதல் பெசன்ட் நகர் இடையே கடற்கரையோரமாக ரோப் ...

சென்னை: தமிழகம் கலை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் இந்தியாவின் தலைநகரமாக விளங்குகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இந்தியாவின் அழகு என்பது வேற்றுமையில் ஒருமைப்பாடு காண்பதுதான், அதிலும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வேற்றுமை மிகவும் அழகானது. வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ...

பாம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. சபரிமலையில் பாம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்களை கொண்டு செல்லவும் தடை ...

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதல் அதிரடி ரெய்டில் களம் இறங்கியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ...

ஆவின் நிறுவனத்தில் 2020 – 2021-ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் காலியாக இருந்த மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்கள் கடந்த 2020 – 2021-ம் ஆண்டுகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டன. ...

சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் பேசிய அவர், ‘எத்தனையோ தொகுதிகளுக்கும் மாவட்டங்களுக்கும் சென்றிருந்தாலும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது சென்னை கிழக்கு ...

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கையால் அந்த நாட்டு ...

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). காவலாளி.இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆறுச்சாமி தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது சகோதரர் மகாலிங்கம் (50). இந்த நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் மற்றும் ஆறுச்சாமி ...

கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் டி.கே மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மணிகண்டன் தண்டு மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பீடி இல்லை என தெரிவித்துள்ளார். ...