கோவையில் ரவுடி கொலையில் கைதான சஞ்சய்ராஜாவிடம் 2 சீன நாட்டு துப்பாக்கிகள்,பைக் பறிமுதல்..!

கோவையை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி .இவர் கடந்த மாத 12ஆம் தேதி மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கி சுட்டும் படுகொலை செய்யப்பட்டார் .இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சஞ்சய் குமார், காஜா உசேன் , ஆல்வின், சபூல் கான் ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டிலும், சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். இதற்கிடையில் சஞ்சய் ராஜாவை போலீசார் சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து கோவை 3-வது மாஜிஸ் திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3ஆம் தேதி முதல் நாளை( செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .சஞ்சய் ராஜா சீனாவில் தயாரிக்கப்பட்ட 2 கை துப்பாக்கிகள் வைத்திருந்ததாகவும், இந்த துப்பாக்கி மூலம் சத்தியபாண்டி மீது 2 தடவை சுட்டதாகவும் கூறப்படுகிறது .இதையடுத்து அவருக்கு எப்படி சீனா நாட்டு துப்பாக்கி கிடைத்தது ?அவர் எங்கு இருந்து துப்பாக்கி வாங்கினார்? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சஞ்சய் ராஜா கொலை சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று கோர்ட்டில் சரணடைந்தது தெரியவந்தது. மேலும் அவர் மோட்டார் சைக்கிள் மற்றும் சீனநாட்டு துப்பாக்கிகளை சென்னையில் உள்ள ஒரு வாகனம் நிறுத்தும் இடத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து நேற்று முன் தினம் காலையில் சஞ்சய் ராஜாவை போலீசார் வேனில் சென்னை அழைத்து சென்றனர். அங்குள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் 2 சீனா நாட்டு துப்பாக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.இந்தத் துப்பாக்கி சஞ்சய் ராஜாவுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இவர் நாளை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார்..