கோவை: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் வசந்தராஜா (வயது 19). இவர் கோவையில் தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வசந்தராஜா காதலித்து வந்தார். இது தொடர்பாக வசந்தராஜாவிற்கும், இளம்பெண்ணின் அண்ணனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ...

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டு பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றிருந்தார் .மாலையில் திரும்பி வந்து பார்ப்பது வீட்டில் ஜன்னல் கதவுகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில்இருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து ...

கோவை வெள்ளலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோஹி (53) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இதேபோன்று நேற்று இருவரும் மது வாங்கி குடித்தனர். குடிபோதையில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ...

கோவை சாய்பாபா காலனி கே.கே புதூரை சேர்ந்தவர் கார்த்திக் மாரியப்பன்(வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் அரகே உள்ள வளாகத்தில் சந்தன மரம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்து பார்த்தார். ...

சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தமது கோஷ்டியை சேர்ந்த ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டமிட்டுள்ளாராம். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகள் பிளவுபட்டுள்ளன. இதனையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி ...

ஆளுநரின் செயல்பாடுகளை புரிதல் இல்லாமல் அரசியலாக்க வேண்டாம்’ என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்தார். கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள ஜக்கார்பாளையம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் குணசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ...

கோவை: ஷார்ஜா, சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கரோனோ தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கும் ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ...

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும், விரைவில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3 கிமீ ராஜபாதையை சீரமைத்தல், புதிய நாடாளுமன்றம், புதிய பிரதமர் இல்லம், ...

சென்னை: புத்தொழில் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி செயல் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னையில் உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் இணையதள தொடக்க விழா நடைபெற்றது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழகத்தைச் சேர்ந்த புத்தொழில் ...

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று ...