தென்காசி காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி அருகே பிரானூர் பார்டரில் வசித்து வருபவர் நவீன் பட்டேல். இவரது மகள் கிருத்திகா பட்டேல். இவரும் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மகன் வினித் என்பவரும் காதலித்து வந்த நிலையில் டிசம்பர் 27ம் தேதி திருமணம் செய்து ...
தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் குழுவை நவீனமாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனைங்கள் சைபர் கிரைம் குழுவுக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட இருக்கின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் சைபர் கிரைட் காவல்துறை ...
சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தானியங்கி மதுபான விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயந்திரத்தினுள் பணம் செலுத்தினால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, பீர் வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ...
விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு விஏஓ ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை ...
கோவை பீளமேடு பி.ஆர் புரத்தில் லிங்க் டு லிங்க் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான வட்டி, அதிக ஊக்கத் தொகை வழங்குவதாக ஆசை காட்டி பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். ஆனால் உறுதி கூறியபடி வட்டி ஊக்கத் தொகை அசல் ஆகியவற்றை வழங்கவில்லை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா. இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த 3 நாட்களாக தனது மகளுடன், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சிவசரண்யாவின் மகள் ஜனன்தியாஸ்ரீ ...
கோவை – பீளமேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடந்து நடந்து வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளை ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்த வித தடயங்களும், அடையாளமும் தெரிய ...
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதியின் ஒரு நபர் குழு மே-6ம் தேதி விசாரணையை தொடங்க உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைந்துள்ளது. பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் இந்த மேல்நிலை நீர் தேக்கத்தோட்டியில் மர்மநபர்கள் மனிதக்கழிவை ...
கோவை: கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச்சிலையை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில், செக்கிழுத்த செம்மல் ...
சென்னை திருவிழா, சர்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் திருவிழா இன்று சென்னை தீவுத்திடலில் தொடக்கம்… சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெறும் சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ள திருவிழாவை அமைச்சர் உதயநிதி ...













