தூத்துக்குடி விஏஓ கொலையில் திடீர் திருப்பம்… போலீசாருக்கும் தொடர்பு… பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது..!

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு விஏஓ ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மணல் கொள்ளை பற்றி போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்துள்ளனர் . இருவரும் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் .

இந்த நிலையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், முறப்பநாடு காவல் நிலையத்தில் பகுதிக்கு உட்பட்ட கலியாவூர், அனந்த நம்பி குறிச்சி, ஆழிகுடி சென்னல்பட்டி, மருதூர், மணக்கரை ஆகிய தாமிரபரணி ஆற்று படுகைகளில் மணல் கொள்ளை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அப்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர்கள் இந்த மணல் கடத்தலை ஊக்குவித்து வந்துள்ளனர். உளவுத்துறை தனிப்பிரிவு போலீசாரும் மணல் கடத்தல் மூலம் வருமானம் பெற்றுள்ளார்கள். இதனால் ஏப்ரல் 13ஆம் தேதி ராமசுப்பிரமணியன் மீது புகார் அளித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த தகவலை ராம சுப்ரமணியனுக்கு சொல்லி விஏஓ தான் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்திலும் போலீசார் பணம் பெற்றுள்ளார்கள் . வழக்கு பதிவு செய்த போலீசார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள ராம சுப்ரமணியனை கைது செய்யவில்லை . மணல் கடத்தல் கும்பலுக்கும் முறப்பநாடு போலீஸ் அதிகாரிகளுக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது. இரு தரப்பில் அலைபேசி எண்களை ஆய்வு செய்து தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள் .

விஏஓ கொலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு இருப்பதாக தெரிந்திருக்கும் எழுந்த குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்ட மக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.