தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பலே திருடன் கைது..!

கோவை – பீளமேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடந்து நடந்து வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளை ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்த வித தடயங்களும், அடையாளமும் தெரிய வரவில்லை. இந்நிலையில் பீளமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த நபர் அந்த பெட்ரோல் பங்கில் அடிக்கடி வந்து பெட்ரோல் நிரப்பி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்திய போது அவர் அடிக்கடி அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி சென்றது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற சிவா என்ற நபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் மீது கார் திருட்டு வழக்கு ஒன்று பதிவாகி இருந்தது. 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு தனது நான்கு சக்கர வாகனங்கள் திருடும் சம்பவங்களை கைவிட்டு விட்டு. பின்னர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடுவது தெரிய வந்தது. சுமார் 200 க்கும் மேற்பட்ட திருடுகளில் ஈடுபட்டதாகவும், அதில் தங்க நகைகள் 57 சவரன் மீட்கப்பட்டதாகவும், 31 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் பணம் காவல் துறையினர் மீட்டு உள்ளதாக தெரிவித்தனர். மேலும் ஒரு இன்னோவா நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனம் காவல் துறையினர் மீட்டு உள்ளனர். அவர் மீது 6 வீட்டில் கொள்ளை வழக்குகள், 2 இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது..