கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேரணி மூலம் எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர்மன்ற தலைவர் ...
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா அறிவிப்பு.. சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா. அதில், ...
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மோகன் இன்று, அதாவது மார்ச் 27 காலை 10 மணிக்கு மாநகராட்சிக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஆண்டில் மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த வரி மற்றும் வாடகைகள் வசூல் செய்யப்பட்டுள்ளதால், இம்முறை பல்வேறு புதிய திட்டங்களும், சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்ப்பட்டது. ...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து பல உயிர்களை பலி வாங்கி வரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சியில் ...
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ‘நரேன் பயர் ஒர்க்ஸ்’ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நரேன்(எ) நரேந்திரன், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் ...
ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு- லோக்சபாவில் கறுப்பு உடையுடன் திமுக எம்பிக்கள் பங்கேற்பு..!
டெல்லி: ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து லோக்சபாவில் கறுப்பு உடை அணிந்து திமுக எம்.பிக்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தொடர்பான விமர்சன வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை ...
வளர் இளம் பருவத்தில் மாணவர்கள் எதிர்காலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். எனவே பிரச்சனைகளுக்கான தீர்வு தேவைப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.30 லட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள். பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும் பள்ளிகளில் அனைத்து ...
அமெரிக்காவில் பணீ நீக்கம் என்பது இன்று முடிந்த பாடாக இல்லை. தொடர்ந்து டெக் துறையில் தொடங்கி இன்று பல்வேறு துறைகளிலும் நீடித்து வருகின்றது. இதனால் ஏற்கனவே லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் இது வங்கித் துறையில் நெருக்கடியான நிலையானது நிலவி வரும் நிலையில், இது மேற்கொண்டு பணி நீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடம்பூர் போலீசார் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குன்றி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வேனை போலீசார் ...












