சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் இதோ..!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மோகன் இன்று, அதாவது மார்ச் 27 காலை 10 மணிக்கு மாநகராட்சிக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டில் மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த வரி மற்றும் வாடகைகள் வசூல் செய்யப்பட்டுள்ளதால், இம்முறை பல்வேறு புதிய திட்டங்களும், சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்ப்பட்டது. அதேபோல், மாந்கராட்சி உறுப்பினர்களின் வார்டுக்கான மேம்பாட்டு நிதியும் இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகமாக ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், 183 அறிவிப்புகளுடன் பெட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  • மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதன் மூலம் சென்னையில் உள்ள பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக குறைகளைத் தெரிவிக்கலாம்.
  • கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்வு.
  • சென்னை பள்ளிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
  • 11ம் வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படும்
  • 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு carrer guidance programme நடத்தப்படும்
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக கற்றல் பயிற்சி வழங்கப்படும்
  • 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி வழங்கப்படும்
  • சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்காக 2500 மலேரியா பணியாளர்களுக்கு vector control kits வழங்கப்படும்
  • சென்னை முழுவதும் ஆறு நாய் பிடி வாகனங்கள் மற்றும் ஐந்து மாடு பிடி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்
  • சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் ஐந்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தேசிய தரவுறுதி தரநிலை சான்றிதழ் பெற பணிகள் மேற்கொள்ளப்படும்
  • ஆலந்தூர் மற்றும் ஷெனாய் நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்
  • சென்னையில் நெகிழி தடை தீவிரமாக கண்காணிக்கப்படும். மக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்பிகளை அறிவித்து வருகிறார்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.