சென்னை: ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.10) நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு ...

அதிமுகவினரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்ததால் சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அரசினர் தீர்மானம் உள்ளது; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித்தலைவரை போலவே எதிர்க்கட்சித் ...

தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்ட சோதனையில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவப் படிப்பைப் படிக்காமல் பலர் மருத்துவம் பார்ப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் படி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 10 ...

திருவனந்தபுரம்: கேரளாவில் முழு ரயிலையும் எரிக்க ஷாரூக் ஷபி சதி திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட உள்ளது. கடந்த 2-ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் இருந்த ...

வாஷிங்டன் : சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். அதிலும் இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா அரசு மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை 25 டாலர் உயர்த்தியுள்ளது. இதுவரை ...

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யஷ்ராஜ் ஆராய்ச்சி அறக்கட்டளை (YRF) ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, “நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் நரேந்திர மோடி தலைமையிலான ...

பெய்ஜிங்: சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் சீனா இடையில் அப்படி என்னதான் பிரச்சனை.. தைவான் என்பது தனி நாடா? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம் பின்வருமாறு, சீனாவிற்கு அருகே தென் ...

பெங்களூரு: கர்நாடகாவில் ‘புலிகள் திட்டத்தின்’ பொன்விழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள புலிகள் குறித்த எண்ணிக்கை கணக்கெடுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார். அதேபோல புலிகள் மட்டுமல்லாது மற்ற பெரிய பூனை இனங்களான ‘புலி-சிங்கம்’ இனத்தையும் காக்க புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார். ஒவ்வொரு காடுகளிலும் இயற்கையாகவே உணவு சங்கிலி கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த உணவு சங்கிலியின் ...

ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது அவர்களுடன் இணைந்தார். பின்னர் வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற ...

சொத்து வரி உயர்த்தப்பட்டால் வீட்டு வாடகை உயர வாய்ப்பு.. தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் தற்பொழுது இருந்து வரும் நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, ...