கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 64) இவரது மனைவி தனலட்சுமி (வயது 54) இவர்கள் இருவரும் தங்க நகை வியாபாரம் செய்து வந்தனர். இதற்காக பலரிடம் தங்கம் மற்றும் பணம் வாங்கி இருந்தனர். அந்த பணத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி ஸ்ரீதரும் அவரது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்ல கூடிய நிகழ்வாக மாறிப்போனது. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டுயானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் இந்த யானையை அடர் ...

கோவை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34) இவர் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் தங்கி இருந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பி. கே. எஸ். காலனி காமராஜ் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 73) இவரது மனைவி கமலம் (வயது 68 )இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர் . இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது .இந்த நிலையில் 3-வது மகன் செந்தில்குமார்  ( வயது 40 )தனது மனைவியை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் விழா  நடைபெற்றது. அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் ...

சென்னை: தமிழக அரசின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒருவழியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ...

சென்னை: சிறைவாசிகளுக்கான உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். ...

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.இந்நிலையில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த மகேஸ்வரி அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு மகேஸ்வரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தள்ளாடும் போதையில் நடுரோட்டில் படுத்துக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார்.மேலும் தனக்கு அரசு வேலை வேண்டும் ...

கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனதுறையினர் தெரிவித்து ...

வார நாட்கள் முழுவதும் கடினமாக உழைக்கும் பலரும் வார இறுதியில் ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு சென்று சந்தோஷமாக இருந்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பது தற்போது பலரிடமும் சர்வ சாதாரணமாகி விட்டது. பாண்டிச்சேரிக்கு செல்வது என்றாலே பெரும்பாலான இளைஞர்களின் நினைவுக்கு வருவது மது விருந்துதான். அவர்களை குறிவைத்து புதுச்சேரியைச் சேர்ந்த ‘கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி’ ...