டிப்பர் லாரி மோதி கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவி பரிதாப பலி – 15 அடி தூரம் இழுத்துச் சென்ற சோகம்..
கோவை: சேலம் மாவட்டம் , தம்பம் பட்டி உடையார்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 31) இவரது மனைவி மோகனா (வயது 29 )இவர்கள் இருவரும் நேற்று குனியமுத்தூர் ரோடு கோவை புதூர் பிரிவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்களது ஸ்கூட்டர் மீது ...
கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி கொலையும்,நீதிமன்றம் அருகே நடந்த ரவுடி கொலையும் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இது தொடர்பாக ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு,ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து போலீசார் 3 ரவுடிகளை தேடி வருகிறார்கள்.இந்த நிலையில் ...
கோவை பேரூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் புதூரில்ஒரு தோட்டத்துக்கு அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது தெரிய வந்தது. இது தொடர்பாக செல்ல கவுண்டன் புதூரை சேர்ந்த பிரதீப் குமார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குள, குப்பண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 55 )கூலி தொழிலாளி. இவருக்கும் இவரதும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. முத்துக்குமார் குடிப்பழக்கம் உடையவர் இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ...
கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன் இவர் தற்போது பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார் . இதேபோல தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சுரேஷ் கோவை மாவட்ட சைபர் ...
கோவை குனியமுத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (வயது 25) பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் நேற்று இரவு செல்வபுரம், தில்லைநகருக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 11- 45 மணியளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் ரஹ்மத்துல்லாவை ...
சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:- 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஓராண்டு காலமாக விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த காட்டு யானை இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றதோடு பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தி ...
சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், சூடானின் ராணுவத் தலைவர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹா-னுக்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (ஆர்.எஸ்.எஃப்)யின் தலைவரும், ராணுவத் துணைத் தலைவருமான முகமது ஹம்தன் டாக்லோ-வுக்கும் கடந்த ஒரு வாரமாக யுத்தம் நடந்துவருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் ...
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரு மடங்கு உயர்வு – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் . மேலும் அரசுப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத ஒதுக்கீடு பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை ...













