பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயா்ந்து அந்நாடுகளின் குடியுரிமையைப் பெற்றோருக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக ரூ.3,408 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயா்ந்து அந்நாடுகளின் குடியுரிமையைப் பெற்றோருக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக ரூ.3,408 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகான பிரிவினை, சீனாவுடனான 1962 போா், ...

சென்னை: தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, மெழுகுவர்த்தியை போல திமுக வின் ஆட்சியும், விரைவில் உருகும் என விமர்சித்துள்ளார். ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியலணி மாநில தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சிவானந்தா சாலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் ...

பொது வெளியில் குற்றசாட்டுகளை கூறி மோதிக்கொண்ட பெண் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை. கர்நாடக மாநிலத்தில் ரூபா ஐ.பி.எஸ்., ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரூபா, ரோகினி ஆகியோர் இடையே மோதல் போக்கு அதிகரித்து, சர்ச்சனையான நிலையில் அம்மாநில அரசு ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஆளும்கட்சி வழங்கும் பிரியாணி, பணம், பரிசு பொருட்களை பெற்று, பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களால், வேலைக்கு ஆட்கள் இன்றி ஈரோட்டில் தொழில்கள் முடங்கி உள்ளன. இது பற்றி நெசவாளர்கள் பலர் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஜன., 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ...

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவரும் சிவனை கௌரவப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது.. ககன்யான் ...

அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ...

மாஸ்கோ: உக்ரைன் போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் நேற்று திடீரென உக்ரைனுக்கு சென்றிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப். 24ஆம் தேதி ரஷ்யா மிக பெரிய போரை தொடங்கியது. உலகிலேயே மிக வலிமையான ராணுவங்களில் ...

சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது ...

தென் ஆப்ரிக்கா: தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து அந்த நாட்டு கடல் பகுதியில் சீனாவும், ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும், உக்ரைனை தாக்கி வரும் ரஷ்யாவும் தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து தங்களது கடற்படை வீரர்களுக்கான போர் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த போர் ...

கோவை அருகே உள்ள குறிச்சி ,சிட்கோ, ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியில் வசிப்பவர் சிவ சண்முகம் ( வயது 36) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டுக்கு சென்றிருந்தார் . மறுநாள் வந்து பார்த்த ...