பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயா்ந்து அந்நாடுகளின் குடியுரிமையைப் பெற்றோருக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக ரூ.3,408 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயா்ந்து அந்நாடுகளின் குடியுரிமையைப் பெற்றோருக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக ரூ.3,408 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகான பிரிவினை, சீனாவுடனான 1962 போா், பாகிஸ்தானுடனான 1965 போா் ஆகியவற்றுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், சீன நாடுகளுக்குப் பலா் இடம் பெயா்ந்தனா். அவா்கள் அந்நாடுகளிலேயே தங்கி அங்கு குடியுரிமையைப் பெற்றனா். அதையடுத்து, அவா்களுக்குச் சொந்தமாக இந்தியாவில் உள்ள சொத்துகளைக் குத்தகைக்கு விட்டு பணமாக்கும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அவா்களுக்குச் சொந்தமாக இருந்த தங்கம், வெள்ளி, நிறுவனப் பங்குகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் மூலமாகக் கிடைத்த வருவாய் குறித்த விவரங்களை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
Leave a Reply