கோவை அருகே உள்ள குறிச்சி ,சிட்கோ, ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியில் வசிப்பவர் சிவ சண்முகம் ( வயது 36) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டுக்கு சென்றிருந்தார் . மறுநாள் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 10 கிராம் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சிவ சண்முகம் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply