பொள்ளாச்சியில் 5 வாகனங்கள் உடைத்து தீ வைத்த வழக்கில் பி.எப் .ஐ. நிர்வாகி 3 பேர் கைது..!

கோவை : பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் 2 கார் 2 ஆட்டோ கல்வீசி கண்ணாடிகள் உடைக்கபட்டு சேதப்படுத்தப்பட்டது. ஒரு சரக்கு ஆட்டோ டீசல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்பு உடையவர்களை பிடிக்க மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில்,போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் 7தனி படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் இதில் தொடர்புடைய பொள்ளாச்சி முகமது ரபிக் மற்றும் ( வயது 26)பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த மாலிக் என்ற சாதிக் பாடசா (வயது 32) சூளேஸ்வரன்பட்டி ரமேஷ் ராஜா (வயது 36) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.இவர்களில் முகமது ரபிக் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். பி.எப். ஐ. அமைப்பின் பொள்ளாச்சி பகுதி செயலாளராக உள்ளார்.மாலிக் என்ற சாதிக்பாட்சா டூ வீலர் மெக்கானிக்காகவும்,பிஎப் உறுப்பினராகவும் உள்ளார். ரமேஷ் ராஜா சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.பி.எப். உறுப்பினராக உள்ளார்.இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறார்கள்