கோவையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-அண்ணாமலை தலைமையில் நடக்கிறது..!

கோவை:
கோவை சிவானந்தா காலனியில் இன்று மாலை 4 மணிக்கு இந்து விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாநில பொது செயலாளர் ஏ பி முருகானந்தம் , மாநில விவசாய அணி தலைவர் மற்றும் கோவை மாவட்ட பார்வையாளர் நாகராஜ் மாநில பொருளாளர் , எஸ் ஆர் சேகர் , மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் கமாண்டோ. படைகள் அதிரடி படை கலவர தடுப்பு பிரிவு உள்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.