கோவை சவுரிபாளையம் ரோடு, ஜி.வி ரெசிடென்சி பகுதியில் பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் சவுரிபாளையம் ஈஸ்வரன் கோவில் ...

புதுடெல்லி: நிறுவனங்கள், தனிநபர்கள் என மொத்தமாக 7.4 கோடி பேர் 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் ஆகும். நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ...

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், குண்டடம் வட்டார அளவில் பள்ளி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சேடபாளையம் மாதிரிப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டு தனித்தனியே அவர்களின் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(54). இவர் புங்கம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மோகனின் தாயார் ராஜம்மாள்(73) வீட்டில் விருதுநகரை சேர்ந்த குமாரசாமி(36), அவரது மனைவி முருகேஸ்வரி(31) இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து ...

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புஞ்சை புளியம்பட்டியில் கோவை – சத்தியமங்கலம் சாலையில் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கண்ணதாசன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணதாசன் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை முடித்துவிட்டு கடைக்கு சென்று ...

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.  ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் மைசூர் ...

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அகழாய்வில் கல்வட்டத்தில் ...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் ஊரக தோட்டக்கலை பணி அனுப திட்டத்திற்காக தென்காசி மாவட்ட த்திற்கு வருகை புரிந்த விருதுநகர் மாவட்டம், கலசலிங்க கல்லூரி தோட்டக்கலை துறை மாணவிகள் பா.வேல் அரசி, பா.லக்ஸா ஹரிணி, ர.ரேணுகா தேவி, ...

தென்காசி வட்டாரத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி முகாம் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் பயிரிடுவதற்கு ஜீன் – ஆகஸ்டு மாதங்கள் உகந்தது ஆகும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அன்றாட தேவைக்குரிய காய்கறிகள் பயிர் செய்து பயன் பெற வேண்டும் என்ற ...

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகா. இம்மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. அதுவும் காங்கிரஸ்- ...