அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் ...

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார்.அவர் எதிர்பார்த்ததை விட மாநாடு சிறப்பாக அமைந்ததை அடுத்து மே 8-ம் தேதி டிடிவி தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியலில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்த ...

வருகிற ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. நெல் பாசனத்திற்காகவும், விவசாயிகளின் நலனை காக்கவும் மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் அணைகளின் நீர் ...

இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு என தகவல்.. இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், விதிமுறைகளுக்கு கட்டுப்படாத மற்றும் போதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் NMC-யின் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று ...

வடகொரியாவில் பைபிள் வைத்திருந்ததற்காக தம்பதியினருக்கு மரண தண்டனையும், 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் கண்டிப்பான நாடுகளில் ஒன்றாக வட கொரியா பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் தொடர்ந்து சர்வாதிகார முறையில், ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வட கொரியாவின் ஜனாதிபதியாக கிம் ஜாங் உன் இருக்கிறார். அந்நாட்டில் பொதுவாக கடுமையான சட்டங்கள் இருப்பதாகவும், ...

சென்னை: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் எனவும் தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் ...

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாணியில் போலீஸ் பணியை துறந்து தமிழ்நாடு பாஜகவில் இனுனொருவர் இணைந்துள்ளார். அண்ணாமலையால் ஈர்க்கப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்ற விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடகாவில் பணியாற்றி ...

ஐபிஎல் தொடரின் பிளேஆப் போட்டியில் டாட் பந்துகளுக்கு மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதல் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்ட இரு அணிகளாக சென்னை மற்றும் குஜராத் அணிகள் சிறந்து விளங்கின. ...

சென்னையில் திடீரென வெயில் தாக்கம் குறைந்து அடைமழை பெய்வதற்கான அறிகுறியாக கருமேகங்கள் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ...