வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு… கோவை அதிகாரி, மனைவிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை..!

கோவை மாவட்ட தொழிற்சாலைகளின் துணை தலைமை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் டி.எம்.பொன்னுசாமி இவரது மனைவி கொடி நிலை.இந்த நிலையில் பொன்னுசாமி கடந்த 1 – 1 – 1995 முதல் 31 -7. 2001 வரையிலான காலகட்டத்தில் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 20 லட்சத்து 71 ஆயிரத்து 696 ரூபாயை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி கொடி நிலை ஆகியோர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பொன்னுசாமி கொடிநிலை தம்பதிக்கு ஓரு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் ரம்பா தீர்ப்பளித்தார்..