சுற்றுலாத்துறையின் மூலம் ரூ.62.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்- மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தகவல்.!!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் ஈற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி நிட்டப்பாணிகனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயமாத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இராமேஸ்வரம் சுற்றுலா தலங்களில் முதன்மை பகுதியாக இருந்து வருகிறது. இங்கு நாள்தோறும் சுற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அவர்கள் தங்குவதற்கு தேவையான தங்கும் விடுதிகள் சுற்றுலா துறையின் மூலம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறன, அதேபோல் உணவகங்களும் செயப்பட்டு வருகிறது; மேலும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.8.25 கோடி பதிப்பீட்டில் கூடுதல் கட்டட வசதிகள் மேற்கொள்ளும் பாணியும் நடைபெற்று வருகின்றன. சுற்றுலா துறையுடன் இராமேஸ்வரம் நகராட்சி ஒருங்கினைந்து ரூ.49 கோடி மதிப்பீட்டில் இராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் பகுதி மற்றும் கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள நடராஜபுரம் பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் ஹெலிகாப்டர் சேவை துவங்கும் வகையில் 13.15 ஏக்கர் நிலம் தேர்வு செய்து அதற்கான திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது. அதேபோல் தனுஷ்கோடியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயம் ரூ 5 கோடி மதிப்பீட்டிம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரிசல் முனையிலிருந்து தனுஷ்கோடி வார சாலை சீரமைக்கப்பட்டு இரு பக்கங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு செல்லும் வகையில் மேடைத்தளங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாம்பன் பகுதியில் உள்ள குந்துகால் பகுதியில் சுற்றுலாத்தளம் மேம்படுத்த திட்ட வரைவுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான பணிகளும் விரையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு இராமேஸ்வரத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் திட்டப்பணிகள் நடைபெறுகின்றது. விரைவில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு சற்றுலாப் பயணிகளுக்கான போதிய வசதிகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனார்.