பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கடும் வெப்ப அலையையும் மீறி குவிந்துள்ள பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகன்நாதர் , தேவி சுபத்ரா, பாலபத்ரா இன்று வலம் வருகின்றனர். பூரி ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம். இங்குள்ள ஜெகன்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ...

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கஇல் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ...

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.அந்த வகையில் மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு ...

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன. மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை. கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாக அப்பகுதியில் கடந்து செல்லும் வீடியோக்கள் சமூக ...

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் கழிவுநீர் சாக்கடை, பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே அவ்வப்போது அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர்கள் சாலையில் செல்கிறது. இந்நிலையில் கோவை 32 வது வார்டு தில்லை நகர் சுந்தரப்ப கவுண்டர் ...

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை வரவேற்கும் வகையில், இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோர் வாஷிங்டனில் ஒற்றுமை பேரணி ஒத்திகை நடத்தினர்.. பிரதமா் மோடி வரும் 22-ம் தேதி அமொிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரயாட உள்ளார். இவை மட்டுமின்றி ...

தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்லலாம் என்ற புதிய சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் இடம் வரை தனது ...

மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக பூமியானது 1993 இருந்து 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டி மீட்டர் கிழக்கே சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா தொன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டு ...

திருவாரூரில் கலைஞர் கோட்டம்… இன்று திறந்து வைக்கிறார் நிதிஷ் குமார்.. திருவாரூர் மாவட்டம் காட்டூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள `கலைஞர் கோட்டம்’ திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ...

தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். அப்போது, சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள கல்குவாரி மூலம் ...