பருவமழை காரணமாக சூலூர் பெரியகுளம் நிறைந்து உபரி நீர் சிறிய குளத்திக்கு வருகை தந்து கொண்டிருந்தது சிறிய குளமும் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் சூலூர் மதியழகர் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் உள்ளே ஆகாயத் தாமரைகள் புகுந்து நீர்வழி பாதையை அடைத்ததன் காரணமாக தண்ணீரானது வீடுப் ...

பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். அதில் அவர் “தமிழ்நாடு தந்தை பெரியார் மண். இந்த மண்ணில் அண்ணாமலை இப்படியெல்லாம் பேசுவது தவறு. தந்தை பெரியார் ...

திருப்புவனம்: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது, தங்கக் கொலுசுகளை திருடியதாக கோயில் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் ...

டெல்லி : குற்றப் பின்னணி கொண்ட எம்பி, எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் ...

சென்னை: கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும், என்று அதிமுக பொதுச் ...

சாட்னா: உலக அரங்கில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம். ...

சனாதனத்துக்கு எதிராக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க., எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் கோ வாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த ...

கோவை அருகே உள்ள கோவில் மேடு தடாகம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன், இவரது மகன் கண்ணன் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு சிவகாமி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். ...

நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் வீட்டிற்குள் புகுந்த உடும்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேலகோவில்பட்டி சாலையில் செளபாக்யா நகரில் காந்திராஜன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரி ஊழியரான இவரது வீட்டிற்குள், வாஷிங் மெஷின் அருகே ஒரு அரிய வகை விலங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காந்திராஜன் ...

கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவைபோலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.2-வதுநாளாக நேற்று நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 ...