சத்தியமங்கலத்தில் பெரியார் பிறந்த நாள் விழா..!

சத்தியமங்கலம் :  சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். விசிக பவானிசாகர் தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சென்னியப்பன், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீ ராம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவகுமார், பாமக மாவட்ட செயலாளர் ராஜா, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், தமிழ் சிறுத்தைகள் கட்சி குணசேகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது கான், தமிழ்நாடு அறிவியல் மன்றம் கிருஷ்ணசாமி, விடுதலை வேங்கைகள் கட்சி வேங்கை ராஜன் மற்றும் ஆதி தமிழர் பேரவை மகளிர் அணி செயலாளர் குமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் தொகுதி செயலாளர் பொன் தம்பிராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சாமிநாதன், பெரியபாளையம் சுப்பிரமணியம், சிறுத்தை மூர்த்தி, துரை, ஆறுமுகம், ஈஸ்வரன், அம்பேத்கர், பொன்னரசு,  மாரியப்பன், கோபால்சாமி, சிறுத்தை சிவா, சிறுத்தை சுப்ரமணியன், தனுசுராஜ், விஜயன், முனியப்பா, வேலுச்சாமி, கராத்தே சம்பத், மூணுவீடு பத்திரன், வெற்றி கொண்டான், சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.