சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் நம்பிக்கை இணையம் (பிளாக் செயின்) என்ற நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட சொத்து, திருமணப் பதிவு உள்ளிட்ட அனைத்து வகையான ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். பத்திரப்பதிவு துறையால் அளிக்கப்பட்ட ஆவணங்களை யாரும் திருத்தி ...

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் உற்சாக வரவேற்பானது, அந்நாட்டின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதி என்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் கூறப்படுவதாவது: ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் போராட்டத்தில், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், மோடியும் இணைந்து ...

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (57) .இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் குனியமுத்தூர் பகுதியில் உள்ளது. இக்கரை போலுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற சிவானந்தம் கடன் வசதி செய்து தருவதாக கூறினார் . நிலத்திற்கு கடன் வாங்கி தருவதாக கூறி சக்திவேல் மற்றும் கனகராஜ் பெயரில் சிவானந்தம் மோசடியாக பதிவு செய்தார். ...

வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று அரசு சார்பில் இரவு உணவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்தார். இந்த உணவு விருந்தில் இந்திய தொழில் அதிபர்களும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களின் விவரங்களை பார்க்கலாம். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் ...

வாஷிங்டன்: கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண்பதற்காக 5 கோடீஸ்வர சுற்றுலாப்பயணிகளுடன் டைட்டன் என்ற நீர் மூழ்கி கப்பல் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் தொடர்பை இழந்த இந்த நீர் மூழ்கி வெடித்து சிதறியது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. கடந்த 1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் ...

திண்டுக்கல் ஆர்.எம் புரம் முதலாவது தெருவில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சிகள் ஆணையர் மகேஸ்வரி வீட்டில் காலை முதல் சோதனையானது நடைபெற்று வருகிறது. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஆணையாக பணியாற்றியபோது இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திண்டுக்கல் மாநகராட்சியில் ஆணையர் மகேஸ்வரி பதவி ஏற்று மூன்று மாதங்களில் ...

முருகனின் அறுபடைவீடுகளில் 3 வது படைவீடாக உலக பிரசித்தி பெற்ற ஆலயம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். இந்த மலைக்கோவிலில் சுவாமியை தரிசிக்க அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை, யானைப்பாதை இரண்டுமே உள்ளது. இத்துடன் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் அனைவரும் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரயில் சேவைகளும் ...

சென்னை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ள நிலையில், டிஜிபி ரேஸில் இருக்கும் மொத்தம் 12 பேர் உள்ளதாகவும், அதில் ஐந்து பேர் டாப் இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக காவல்துறையில் உச்சபட்ச ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கரளவாடி கிராமத்தில் உள்ள விவசாயி ...

ஈரோடு மாவட்டம்  புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் ...