பட்டு சேலை வாங்கி ஆந்திரா பெண் 20 கோடி நூதன மோசடி… திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளரிடம் ஆரணி பட்டு சேலை விற்பனையாளர்கள் புகார்.!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியில் பெயர் எடுத்த ஊர் ஆகும் ஆரணி மற்றும் ஆரணி சுற்றி உள்ள சேவூர் முள்ளிப்பட்டு ஒண்ணுபுரம் முனுகப்பட்டு ஆகிய 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறிப்பட்டு பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன ஆரணியில் இருந்து கைத்தறிப்பட்டு ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற வெளி மாநிலங்களும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு ஆந்திராவில் இருந்து காயத்ரி என்ற பெண் செல்வராஜ் என்கின்ற இடைத்தரகர் மூலம் ஆரணியில் பட்டு சேலை கொள்முதல் செய்துள்ளார்.

முதலில் ஆந்திர மாநிலம் அலமேலு மங்கா புரத்தில் பட்டு சேலை கடை வைத்திருப்பதாக 2020 ஆண்டு கொரோனா காலத்தில் பணம் கொடுத்து பட்டு சேலை கொள்முதல் செய்துள்ளார்.

பின்னர் ஆரணி மற்றும் ஆரணி சுற்றியுள்ள பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட பட்டு சேலை வியாபாரிகளிடம் கடனாக பட்டு சேலை கொள்முதல் செய்துள்ளார்.

ஆரணி சேர்ந்த பட்டு சேலை வியாபாரிகளிடம் காயத்ரி மற்றும் அவரது சகோதரிகள் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு சேலை கொள்முதல் செய்துவிட்டு பின்னர் தலைமறைவாகி உள்ளனர்.

ஆரணியைச் சேர்ந்த பட்டு சேலை விற்பனையாளர்கள் ஆந்திரா சென்று பார்த்தவுடன் காயத்ரியின் கடை மூடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அதிர்ச்சி அடைந்த ஆரணியைச் சேர்ந்த பட்டு சேலை விற்பனையாளர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆரணி மற்றும் ஆரணி சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட பட்டு சேலை விற்பனையாளர் 20 கோடி ரூபாய் பணத்தை காயத்ரி அவரது சகோதரி மாதவி இடைத்தரகர் செல்வராஜ் ஆகியோரிடம் பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்தனர்.

ஆரணியில் உள்ள பட்டு சேலை வியாபாரிகளிடம் ஆந்திர மாநிலம் திருப்பதி சேர்ந்த பெண்கள் 20 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…