குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் ...
டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் ...
சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்குவதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பலனளிக்கும் வகையிலான பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ...
2019 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் ...
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கிடையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் ...
தனது மகன் பற்றி தகவல் அளித்தால் ரூபாய் 1 கோடி சன்மானம் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார், ...
கோவை கணபதி நேரு நகரை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 52 ) இவர் கோவை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாத 28-ஆம் தேதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் இருந்து தங்களது வீட்டிற்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 65) சமூக சேவகர் .இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க பொதுமக்களை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் பட்டா சம்பந்தமாக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி ...
கோவை அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன்(வயது 41) இவர் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.கடந்த மாதம் 27 ஆம் தேதி சம்பத் என்பவர் முகுந்தனை தொடர்பு கொண்டார்.தென்னம்பாளையத்தில் ஒரு பழைய மில்லில் உள்ள பொருட்களை விற்பனைக்கு வருவதாகவும் அதன் விலை ரூ 4 கோடிக்கு மேல் இருக்கும் அதை வாங்கி விற்கும் பட்சத்தில் ...
அம்பத்தூர் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள கேஜிஎஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னந்தனியாக வசித்தவர் பொன் ராசாத்தி வயது 84. இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், சென்னையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தன்னந்தனியாக வசித்து வரும் மூதாட்டி பொன் ராசாத்தியை உடனிருந்து பராமரித்துக் கொள்ள அயனாவரத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் வயது 51 என்பவள் மாதம் ...