தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் நிலையில் உள்ள (கொள்முதல் பணியாளர்கள்) 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் ...

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையிலும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் தமிழ்நாடு பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இனிப்பு ...

லக்னோ: விவசாயிகள் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற இடங்களில் ஒன்றான  மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவே அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றுகிறது உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 202 இடங்களில் வெல்ல வேண்டும். தேர்தல் ...

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே அம்மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் அமைதியான முறையில் நடைபெறும். அமைதி நிர்வாகமே ஒரு மாநலத்தை வளர்ச்சி பாதையை நோக்கி வெற்றி நடை போட வைக்கும். ...

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில், கடந்த திங்கட்கிழமையன்று பட்ஜெட் மீதான சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகெல் முதல்வராக உள்ளார். பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, அம்மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ...

இந்தியாவில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள், நிலம், கட்டிடங்கள் ஆகியவற்றைப் பணமாக்கும் திட்டத்தைச் சில மாதங்களுக்கு முன் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும், எங்களுக்கு சொற்ப இடங்கள் கூட கிடைக்கவில்லை என்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் பின்னர் செய்தியாளர்களை ...

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, பரோலில் இருந்தாலும் வெளியில் செல்ல ...

தமிழ்நாட்டில் மின் கட்டணம் 20 சதவீதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்த நிலையில் தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை ...

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றியை குவித்துள்ளது. எனினும் இந்த தேர்தல் வெற்றியுடன் சேர்த்து குழப்பத்தையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது. அதாவது, பல இடங்களில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், ...