கோவை சூலூர் பக்கம் உள்ள காடப்பாடி, பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மருதாச்சலம் ( வயது 51 )கோவில் பூசாரி. இவர் நேற்று மொபட்டில் சூலூர் செல்லக்கரைசல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கரடிவாவி ரோடு சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி இவர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மருதாச்சலம் அதே இடத்தில் பலியானார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . நாகப்பட்டினம் மயிலாடுதுறை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கோவை புது சித்தாபுதூர்,நந்தகோபால் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் மணிகண்டன் (வயது 28) இவர் நேற்று ஸ்கூட்டரில் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நீலகிரி மாவட்டம் டி. மணியட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.