கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..

 

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள படகுக்குழாம் (Boat House) முன்னேற்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள படகுக்குழாம் (Boat House) பகுதியில் உள்ள உணவுக் கூடங்கள் மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் சி.பாலசுப்பிரமணியன், சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி செயற்பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் உள்ளனர்.