ரிஷி சுனக் வேண்டாம்..? போரிஸ் ஜான்சன் கருத்து ..!

யாரை வேண்டுமாலும் பிரதமராக தேர்ந்தெடுங்கள். ஆனால், ரிஷி சுனக் வேண்டாம் என்பது போல தனது கருத்தை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார் போரிஸ் ஜான்சன்.

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். தனக்கு எதிரான நிலைப்பாடு தனது கட்சிக்குள் எழுந்த காரணத்தால் கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார்.

இதனால் தற்போது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில் தற்காலிக பிரதமராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இரண்டு சுற்றுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னணியில் இருக்கிறார். இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் தனது நெருங்கிய வட்டாரத்தில், யாரை வேண்டுமானாலும் பிரதமராக தேர்ந்தெடுங்கள், ஆனால் ரிஷி சுனக் வேண்டாம் என்பது போல கருத்து தெரிவித்தாராம்.

ரிஷி சுனக், பென்னி மோர்டான்ட், லிஸ் ட்ரஸ், கெமி படேனோச் மற்றும் டாம் துகென்தாட் ஆகியோர் பிரிட்டனின் அடுத்த பிரதமர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.